லாரி ஓட்டுனரை தாக்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

 


லாரி ஓட்டுனரை தாக்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

லாரி ஓட்டுனரை தாக்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சென்னையிலிருந்து திருச்சி திருவரம்பூர் பிஹச்இஎல் நிறுவனத்திற்கு இரும்புகளை லாரியில் ஏற்றி வந்த போது சமயபுரம் சுங்கசாவடியில் லாரி ஓட்டுநர் ஆயரசனிடம் சமயபுரம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வராஜ், பர்மிட், பில், தாபல் கேட்டுள்ளார். இதனை தர மறுத்த லாரி ஓட்டுநர் ஆயரசனை போக்குவரத்து உதவி ஆய்வாளர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட லாரி ஓட்டுநர் ஆயரசன் சிகிச்சைக்காக திருச்சி சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஓட்டுநர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுனர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையெடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து திருச்சி மாவட்டம் சமயபுரம் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் சமயபுரம் பள்ளிவிடை பாலம் அருகில் வாகன தணிக்கையின் போது லாரி ஓட்டுநரை மரியாதைக் குறைவாகப் பேசி தாக்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக பணி இடைநீக்கம் செய்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Comments